Mohammed Farook Mohammed Farook Author
Title: சவூதி அரேபியாவில் மழை. வெள்ளத்தால் 18 பேர் மரணம்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
பொது­வாக வறட்­சி­யான பாலை­வன நாடு­க­ளாக விளங்கும் சவூதி அரே­பியா, யேமன், ஈரான் மற்றும் கட்டார் ஆகிய நாடு­களில் வழ­மைக்கு மாறாக இடம்­பெற்...
பொது­வாக வறட்­சி­யான பாலை­வன நாடு­க­ளாக விளங்கும் சவூதி அரே­பியா, யேமன், ஈரான் மற்றும் கட்டார் ஆகிய நாடு­களில் வழ­மைக்கு மாறாக இடம்­பெற்ற கடும் மழை­வீழ்ச்­சியால் பெரும் வெள்ள அனர்த்தம் ஏற்­பட்­டுள்­ளது.
சவூதி அரே­பி­யாவில் மட் டும் இந்த வெள்ள அனர்த்­தத்தில் சிக்கி குறைந்­தது 18 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

தலை­நகர் றியாத் மற்றும் மக்கா ஆகிய பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள பல வீதிகள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்றன.

அந்தப் பிராந்­தி­யங்­களில் வெள்­ளத்தில் சிக்­கி­யி­ருந்த வாக­னங்­க­ளி­லி­ருந்து பலரை மீட்புப் பணி­யா­ளர்கள் வியா­ழக்­கி­ழமை மீட்­டுள்­ளனர். அதே­ச­மயம் தென்­மேற்கு நக­ரான அபாவும் பகு­தி­யாக வெள்­ளத்தில் மூழ்­கி­யது.

இந்த வெள்ள அனர்த்தத்தால் சவூதி அரே­பிய தலை­ந­க­ரிலும் ஏனைய பிராந்­தி­யங்­க­ளி­லு­முள்ள பாட­சா­லை­களை பல நாட்­க­ளுக்கு மூடும் நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு கல்வி அமைச்சு தெரி­விக்­கி­றது.

அந்­நாட்டின் அயல்­நா­டான யேமனில் கடும் மழை­வீழ்ச்சி கார­ண­மாக தலை­நகர் சனா­வுக்கு வடக்­கே­யுள்ள ஹஜ்ஜா மற்றும் ஒம்ரான் மாகாணங்­க­ளி­லுள்ள இரு அணைகள் உட்­பட பல சிறிய அணைகள் சேத­ம­டைந்ததால் ஏற்­பட்ட வெள்ள அனர்த்­தத்தில் சிக்கி குறைந்­தது 16 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

அதே­ச­மயம் ஈரானின் மேற்கு மற்றும் தென்­மேற்கு மாகா­ணங்கள் இந்த வெள்ள அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அங்கு குறைந்­தது இருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் கட்டாரிலும் இடி மின்னலுடன் கடும் மழை பெய்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top