vkrnajur vkrnajur Author
Title: பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 175 நாடுகள் கையெழுத்து !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 175 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. சவுதி அரேபியா, ஈராக், நைஜீரியா, கஜகஸ்தான் உள்ளிட்ட எண்ணெய் வளம...
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 175 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. சவுதி அரேபியா, ஈராக், நைஜீரியா, கஜகஸ்தான் உள்ளிட்ட எண்ணெய் வளம் மிகுந்த நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. புவி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் இலக்கு.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உலகத் தலைவர்கள் புவி வெப்பமடைவதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வின்போது பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், "நமக்கு நேரம் குறைவாக இருக்கிறது. விளைவுகள் பற்றி சற்றும் யோசிக்காமல் செய்யும் நுகர்வு கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும். இன்று இந்த ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திடுவதன் மூலம் எதிர்காலத்துக்கான புதிய உடன்படிக்கையை செய்து கொள்கிறோம்" என்றார்.

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தமானது நடைமுறைக்கு வர வேண்டுமானால் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ள உலக நாடுகளில் 55 நாடுகளாவது இதில் இணைய வேண்டும். இந்த நிகழ்வு 2002-ல் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், பாரீஸ் மாநாட்டில் உலகத் தலைவர்கள் காட்டிய ஆர்வத்தை வைத்து பார்க்கும்போது இந்த ஆண்டு இறுதியிலேயே பாரீஸ் ஒப்பந்தம் நடைமுறைக்கு வர சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.

தலைவர்கள் வாக்குறுதி:

காங்கோ நாட்டின் அதிபர் ஜோசப் கபிலா கூறும்போது, "பாதுகாப்பான பருவநிலையை உறுதி செய்வதற்கான பயணத்தில் இணைகிறோம். கரியமில வாயு வெளியேற்றம் எங்கள் நாட்டில் சிறிய அளவில் இருந்தாலும் பாரீஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே கூறும்போது, "புவி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்று கடந்த டிசம்பரில் பாரீஸில் நடைபெற்ற ஐ.நா. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம் வரும் கோடை காலத்துக்குள் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. மக்கள் அனைவரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்" என்றார்.

அமெரிக்க வெளியுறவுச் செயலர் கெர்ரி கூறும்போது, "இந்த ஒப்பந்தத்தின் சக்தி தனியார் நிறுவனங்களின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எதிர்காலத்துக்கான மாற்று எரிசக்தியை உருவாக்க வேண்டிய சவால் இருக்கிறது" என்றார்.

பருவநிலை, அமைதிக்கான ஐ.நா. தூதுவர் லியானார்டோ டி காப்ரியோ கூறும்போது, "இன்று நாம் பரஸ்பரம் கைகுலுக்கி நட்பு பாராட்டலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் வெறும் கூட்டமாக கூடிப் பிரிவதால் மட்டுமே இந்த உலகுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. இனி பேச்சுகள் வேண்டாம், எந்தவித சமாளிப்புக் காரணங்களையும் கூற வேண்டாம், ஆய்வு செய்கிறோம் என இன்னும் 10 ஆண்டுகளை வீணடிக்க வேண்டாம். இந்த உலகம் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் எடுக்கும் நல்ல முடிவு எதிர்கால சந்ததியினரால் பாராட்டப்படும். தவறான முடிவு எடுத்தால் எதிர்காலம் உங்களை சபிக்கும்" என்றார்.

இதுவே முதல் முறை:

பருவநிலை ஒப்பந்ததில் 175 நாடுகள் கையெழுத்திட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். ஒப்பந்தத்தில் கையெழுத்திடவந்தபோது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி தனது பேத்தியை மேடைக்கு அழைத்து வந்தார். எதிர்கால சந்ததியினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் இவ்வாறு செய்ததாகக் கூறினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top