vkrnajur vkrnajur Author
Title: அதிமுக பட்டியலில் ஒரே நாளில் 12 புதிய வேட்பாளர்கள் அறிவிப்பு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
அதிமுக வேட்பாளர் பட்டியல் 4-வது முறையாக மாற்றப்பட்டுள்ளது.  நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 12 புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன...
அதிமுக வேட்பாளர் பட்டியல் 4-வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. 

நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 12 புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 227 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்டார். தோழமை கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் பட்டியல் 4-வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12 புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன் (செவ்வாய்கிழமை) அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.ஜி.முத்துராஜா நீக்கப்பபட்டு, அத்தொகுதியின் புதிய வேட்பாளராக வைகை செல்வன் அறிவிக்கப்பட்டார்.

நேற்று  (புதன்கிழமை) காலையில் தமிழகம், புதுச்சேரியில் அதிமுக வேட்பாளர்கள் மொத்தம் 10 பேர் மாற்றப்பட்டனர். ஆட்சி மன்ற குழு பரிசீலித்து இம்முடிவை எடுத்துள்ளதாக அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. 

இதைத் தொடர்ந்து பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சி.வி.இளங்கோவன் நீக்கப்பட்டு, சி.ஆர்.சரஸ்வதி புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தற்போது மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எஸ். பாண்டியன் நீக்கப்பட்டு, மதுரை மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இரண்டே நாட்களில் புதன்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, 4-வது முறையாக அதிமுக வேட்பாளர் பட்டியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன்படி, மொத்தம் 13 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top