vkrnajur vkrnajur Author
Title: தி.மு.க. வேட்பாளர்கள் 11–ந்தேதி அறிவிப்பு?
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர் பட்டியலை முதல் –  அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். இதனால் தமிழக தேர்தல் களம...
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர் பட்டியலை முதல் –  அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இதையடுத்து தி.மு.க. வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் தி.மு.க. – காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு உறுதியாகி விடும்.
அதன் பிறகு தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 7–ந்தேதி தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7–ந்தேதி வெளியாகாவிட்டால் 10–ம் தேதி வெளியிடப்படும்.
அதை தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் அறிக்கை தாமதமனால் 11–ந்தேதி அல்லது அதற்கு பிறகே தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தி.மு.க. வட்டாரத்தில் ‘சீட்’ பெறுவதற்காக கடைசி கட்ட முயற்சிகளில் தி.மு.க.வினர் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அடுத்த வாரம் இறுதியில் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.
பா.ம.க.வில் வேட்பாளர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டனர். தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பிறகு அதை வெளியிட டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். எனவே பா.ம.க. வேட்பாளர் பட்டியலும் அடுத்த வாரம்தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top