Mohammed Farook Mohammed Farook Author
Title: தண்ணீர் பஞ்சம் நிலவும் பகுதியில் அமைச்சரின் வருகைக்காக 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீண்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
மும்பை: மகாராஷ்டிராவில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் சூழலில் அமைச்சர் வருகையின்போது தற்காலிக ஹெலிபேட் அமைக்க 10 ஆயிரம் லிட்டர் தண்ண...
மும்பை: மகாராஷ்டிராவில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் சூழலில் அமைச்சர் வருகையின்போது தற்காலிக ஹெலிபேட் அமைக்க 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணடிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் வேளாண் மற்றும் வருவாய் துறை அமைச்சராக இருப்பவர் ஏக்நாத் கட்சே. இவர் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் லத்துார் மாவட்டத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றார். அவர் வருகைக்காக அப்பகுதியில் தற்காலிக ஹெலிபேட் அமைக்கும் பணி நடைபெற்றது. அதற்காக சுமார் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீ்ர் வீணடிக்கப்பட்டது.

அமைச்சர் ஹெலிகாப்டருக்கு பதிலாக பெல்குண்டுவிலிருந்து கார் மூலம் சென்றிருந்தால் வெறும் 40 நிமிடங்களிலேயே லத்துாரை அடைந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. மாநிலம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் சூழலில் இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க லத்துார் மாவட்டத்திற்கு ரயில் மூலம் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் 3 தவணைகளாக கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடதக்கது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஏக்நாத் கட்சே இச்சம்பவம் உண்மைக்கு புறம்பானது என்றார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top