காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: கேரளாவின் கோவில் திருவிழாவில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 102 ஆக உயர்வு
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள பராவூர் கோவில் திருவிழாவில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் ப...
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள பராவூர் கோவில் திருவிழாவில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தினால் பலியானோர் எண்ணிக்கை 102 பேர் ஆக உயர்ந்துள்ளது.  200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பராவூர் புன்டிங்கல் தேவி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் கோவில் திருவிழா இந்தாண்டும் வழக்கம் போல் நடைபெற்றது. திருவிழாவி்ன் போது அதிகாலை 3.30 மணியளவில் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் 84 பேர் வரையி்ல் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி விரைந்துள்ளார்.

தீவிபத்து குறித்து விசாரணைககு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top