vkrnajur vkrnajur Author
Title: சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவுடனான SDPI கூட்டணி உறுதியானது!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
திமுகவுடனான SDPI கூட்டணி உறுதியானது! திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி மற்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை எஸ்.டி.பி.ஐ கட...
திமுகவுடனான SDPI கூட்டணி உறுதியானது!

திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி மற்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் மற்றும் மாநில துணைத் தலைவர்கள் முகமது முபாரக், அம்ஜத் பாஷா ஆகியோர் அடங்கிய குழு இன்று சந்தித்து கூட்டணியை உறுதி செய்தது. இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி; திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியுடன் எஸ்.டி.பி.ஐ கட்சி இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. ஏற்கனவே, எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேர்தல் நிலைப்பாடுகள் குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை இரண்டுமுறை சந்தித்து நாங்கள் பேசியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக இன்று திமுக தலைவர் டாக்டர் கலைஞர் மற்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளோம். இந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமானதாக நடைபெற்றது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி இறைவன் நாடினால் நிச்சயம் வெற்றிபெறும். இந்த கூட்டணியில் மதசார்பற்ற கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியாக மாற்ற முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

அப்போது இந்த கூட்டணியில் மமக போன்ற கட்சிகள் இருக்கும் நிலையில் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் வராதா என செய்தியாளர்கள் கேட்டபோது; அவ்வாறான பிரச்சனைகள் எழ வாய்ப்பில்லை என்றும், தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்யும் திமுக நிர்வாக குழுவும், கூட்டணி கட்சிகளும் அவ்வாறான பிரச்சனைகள் எழாமல் பார்த்துக்கொள்வார்கள் என்றார்.

மேலும், எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடுகிறது என செய்தியாளர்கள் கேட்டபோது, அதுகுறித்த பேச்சுவார்த்தை இப்போது நடைபெறவில்லை என்றும், விரைவில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்றார்.

இந்த சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், மாநில பொருளாளர் முகைதீன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top