vkrnajur vkrnajur Author
Title: ஆப்பிள் நிறுவனத்தின் உதவியில்லாமல் ஐபோன் தகவல்களை பெற்ற FBI !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ஆப்பிள் ஐபோனின் பாதுகாப்பு தொழில்நுட்ப பூட்டை உடைத்து, தீவிரவாதி ஒருவரின் ஐபோனுக்குள் புகுவதற்கான தொழில்நுட்ப வழியை கண்டுபிடித்துவிட்டதாக ...
ஆப்பிள் ஐபோனின் பாதுகாப்பு தொழில்நுட்ப பூட்டை உடைத்து, தீவிரவாதி ஒருவரின் ஐபோனுக்குள் புகுவதற்கான தொழில்நுட்ப வழியை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI கூறியுள்ளது. 

இதனால் தங்களுக்கு உதவும்படி ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் FBI கூறியுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் 14 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தொடர்பான வழக்கில் சையத் ரிஸ்வான் என்பவரும், அவர் மனைவியும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் FBI , அவர்களின் ஐபோனை ஆராய அதனை தயாரித்த ஆப்பிள் நிறுவனம் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க ஆப்பிள் நிறுவனம் மறுத்துவிட்டது. 

இதனை எதிர்த்து கலிபோர்னியா நீதிமன்றத்தில் FBI வழக்கு தொடர்ந்தது. தற்போது சையத் ரிஸ்வானி ஐபோனில் உள்ள தகவல்களை எடுத்துவிட்டதாக கூறியுள்ள FBI, வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top