vkrnajur vkrnajur Author
Title: ​நாளை முதல் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வரும் ஏப்...
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 18 சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு லாரி உமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

மணல் லாரி உரிமையாளர்கள் ஓராண்டுக்கு உரிய சுங்கக் கட்டணத்தைச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும், ஆனால் சுங்க கட்டணத்தின் உயர்வை ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது எனவும் மணல் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  மேலும், சுங்கக் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இதனிடையே சுங்கக்கட்டண உயர்வு, வாகன காப்பீட்டு உயர்வு, ஆகியவற்றை தடுத்து நிறுத்தகோரி, சென்னையில் வரும் 3ம் தேதி நடைபெறும் லாரி உரிமையாளர்ள் கூட்டத்தில் போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top