காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவோம்! சவுதி அரேபியாவுக்கு - டொனால்ட் டிரம்ப் மிரட்டல்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வாஷிங்டன், மார்ச் 27- அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தொடர்ந்து பல மாகாணங்களிலும் முன்னிலையில் இருந்து வருபவர் டொனால்...
வாஷிங்டன், மார்ச் 27-

அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தொடர்ந்து பல மாகாணங்களிலும் முன்னிலையில் இருந்து வருபவர் டொனால்ட் டிரம்ப்.அதிபராவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள வேட்பாளராக பெரிதும் பேசப்பட்டு வரும் டிரம்ப், அவ்வப்போது, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விமர்சனங்களை தேடிக்கொள்வதிலும் நிகரில்லாதவராக விளங்கி வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தனது வெளியுறவுக் கொள்கை குறித்து நீண்ட பேட்டி ஒன்றை டொனால்ட் டிரம்ப் அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சண்டையிட தங்கள் நாட்டின் ராணுவ தரைப்படையை சவுதி அரேபியா அரசு அனுப்பி வைக்க வேண்டும்.

இல்லாவிட்டால் நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சவுதியில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கு மதி செய்வது நிறுத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் பாதுகாப்பு இல்லாவிட்டால் சவுதி அரேபியா என்ற நாடே இல்லாமல் போய்விடும் எனவும் டொனால்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top