vkrnajur vkrnajur Author
Title: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு - எஸ்டிபிஐ கட்சி குற்றச்சாட்டு !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
இது குறித்து, எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியுள்ளதாவது:-  திருச்சி கே.கே.நகர...
இது குறித்து, எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 
திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் காஜா முஹைதீன். எஸ்.டி.பி.ஐ  கட்சி நிர்வாகி. இவரை கடந்த மூன்று தினங்களாக காணவில்லை. இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று  காலை திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகில் காவிரி ஆற்றின்  கரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இந்த படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம். அவரது குடும்பத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் சிறுபான்மை சமூகத்திற்கெதிரான அச்சுறுத்துதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இது போன்ற படுகொலைகள் நிகழ்வது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதையே காட்டுகிறது.
கொலை செய்யப்பட்ட காஜா முஹைதீனின் வருமானத்தை மட்டுமே அவரது குடும்பம் நம்பியிருந்த நிலையில், காஜா முஹைதீனின் படுகொலை அவரது குடும்பத்திற்கு பெரும் இழப்பை பெற்றுத்தந்துள்ளது. எனவே, தமிழக அரசு தேர்தல் கமிஷனிடம் முறையாக அனுமதி பெற்று பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும், இத்தகைய மாபாதக செயலுக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை காவல்துறை உடனே  கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை  சமூகங்கள் அமைதியாக வாழ தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top