vkrnajur vkrnajur Author
Title: சிங்கப்பூரில் சிகிச்சை பெற திட்டம்: பிரச்சாரத்துக்கு தயாராகிறார் விஜயகாந்த் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்துக்கு தயாராகும் நோக்கில் சிங்கப்பூர் சென்று சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்துக்கு தயாராகும் நோக்கில் சிங்கப்பூர் சென்று சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி இணைந்த பிறகு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது, தொகுதிகளை இறுதி செய்வது போன்ற பணிகளில் விஜயகாந்த் அணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நலக் கூட்டணியினரின் 5-ம் கட்ட பிரச்சாரப் பயணம் முடிந்ததும், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என கூறப் படுகிறது.
தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா நேற்று முன்தினம் நெல்லையில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணி தலை வர்களுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். விஜயகாந்தின் மேடை பேச்சு புரியாமல் இருப்பதற்கு காரணம் அவருக்கு தொண்டை பிரச்சினை இருப்பதுதான் என்று பிரேமலதா கூறியிருந்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார் விஜயகாந்த். அதேபோல, இப்போதும் பிரச்சாரத்துக்கு தயாராகும் வகையில் சிங்கப்பூர் சென்று சிகிச்சை மேற்கொள்ள விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஏப்ரல் முதல் வாரத்தில் சிகிச்சையை முடித்துக்கொண்டு திரும்பும் விஜயகாந்த், சென்னையில் நடக்கும் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அதைத் தொடர்ந்து, அனைத்து தொகுதிகளிலும் அவர் பிரச்சாரம் மேற்கொள்வார் எனவும் அவருக்கான பிரச்சார வேன் தயார் செய்யப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகிறது என்றும் தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top