Mohammed Farook Mohammed Farook Author
Title: தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச...
தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் அரசியல் மாநாடு நேற்று மாலை விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு தேசிய பொதுச்செயலாளரும், மாநில தலைவருமான பேராசிரியர் காதர்மொகிதீன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஷாஜகான், முதன்மை துணை தலைவர் அப்துல்ரஹ்மான், மாநில செயலாளர்கள் நெல்லை அப்துல்மஜீத், காயல் மகபூப், அப்துல் பாசித், ஜீவகிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர் வரவேற்றார்.

மாநாட்டில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் தாய் சபையாக இந்திய முஸ்லிம் லீக் கட்சி உள்ளது. கழகத்துக்கு எவ்வளவு சோதனை வந்தாலும், உங்களுக்கு எவ்வளவு வேதனை வந்தாலும், உங்களோடு ஒருங்கிணைந்து தான் இருப்போம்.

ஆளும் கட்சியாக இருந்தபோது, உங்கள் கோரிக்கை நிறைவேற்றியவர் கருணாநிதி. 2-வது முறையாக அவர் பொறுபேற்ற போது, தமிழ் பேசும், உருது பேசும், முஸ்லிம் மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். 3-வது முறையாக முதல்-அமைச்சராக இருந்த போது, சிறுபான்மை நல வாரியம் அமைத்தது மட்டுமின்றி, அதற்கு சட்டபூர்வ அங்கீகாரத்தையும் ஏற்படுத்தி தந்தார். நான்காவது முறையாக பொறுப்பேற்ற போது உருது அகாடமி அமைக்கப்பட்டது. சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம் அமைக்கப்பட்டது.

சிறுபான்மை மக்களுக்காக தி.மு.க. ஆட்சியில் ரூ.331 கோடியில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த திட்டங்களை பட்டியலிட்டு, ஆதாரத்தோடு கூறமுடியும். மாநாட்டில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருணாநிதி 6-வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறார்.

அவரை பொருத்தவரை சொன்னதை செய்வார். சொல்லாதையும் செய்வார். நீங்கள் நினைத்ததையும் நிறைவேற்றுவார். நினைக்காததையும் நிறைவேற்றுவார். யாரும் கவலைப்பட தேவையில்லை. மே மாதம் நடக்கும் தேர்தலுக்கு பிறகு கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்ததும், நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top