Mohammed Farook Mohammed Farook Author
Title: அமைதியை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம் - டெல்லியில் பிரதமர் மோடி பேச்சு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
மதத்தின் பெயரால் தீவிரவாதம் பரப்பப்படுகிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமில்லை என்றும், தீவிரவாதத்தை அது தோன்...
மதத்தின் பெயரால் தீவிரவாதம் பரப்பப்படுகிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமில்லை என்றும், தீவிரவாதத்தை அது தோன்றும் இடத்திலேயே வேரறுக்க உறுதியேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இஸ்லாமிய சூஃபியிஸத்தின் 4 நாள் சர்வதேச மாநாடு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, மனித சமூகத்தை நல்வழிப்படுத்தி, அமைதியை போதிக்கும் மார்க்கம் இஸ்லாத்தில் உள்ளதாகக் கூறினார்.

இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் அல்லாவுக்கு 99 பெயர்கள் இருப்பதாகத் தெரிவித்த மோடி, அனைத்துப் பெயர்களும் பரிவு, இரக்கத்தையே குறிப்பதாக கூறினார்.

உலகம் முழுவதும் பரவும் தீவிரவாதத்தை இனியும் சகித்துக்கொண்டிருக்க முடியாது என்றும், தீவிரவாதம் தோன்றும் இடத்திலேயே அதனை வேரறுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவத்தார்.

தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமெனில், அமைதியைப் பரப்பும் சூஃபியிஸத்தின் கொள்கைகள் பரவுவது அவசியம் என்றும் மோடி குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்பது எந்தவொரு மதத்துக்கும் எதிரானது அல்ல; அவ்வாறு இருக்கவே முடியாது. ஏனெனில், எந்தவொரு மதமும் வன்முறையை ஆதரிப்பதோ, அங்கீகரிப்பதோ இல்லை என்றும் கூறியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top