Mohamed Farook Mohamed Farook Author
Title: அன்பிற்கினிய தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு….
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அன்பிற்கினிய தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு, ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக! கேள்விக்கென்ன பதில் நி...
அன்பிற்கினிய தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு,

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக!

கேள்விக்கென்ன பதில் நிகழ்சியில் பல் வேறு அரசியல்வாதிகள் பதிலளித்துச் செல்கிறார்கள். அதைப் பார்க்கும் எமக்கு, ஒரு பொழுதும் நெருடல் இருந்ததில்லை. காரணம், அவர்கள் அரசியல் வியாதிகள். அதில் இசுலாமிய அரசியல் வியாதிகளும் அடங்கும்.

ஆனால், தாங்களுக்கென ஒரு தளம் உண்டு. எம்மைப் போன்றோர் உங்களை, அரசியலில் மிக நேர்மையானவராக கருதுகிறோம். அப்படிப்பட்ட நீங்கள் நேற்றுக் கொடுத்த அந்த பேட்டி, எத்தனையோ முறை முயன்றும் உள் வாங்க இயலாத மூச்சாய், கலப்படங்கள் நிறைந்திருக்கிறது.

அரசியலில் வெற்றி என்பதை விட, அரசியல் வரலாற்றில் வெற்றி என்பதை தான் ஒரு எழுச்சி நாயகன் குறிக் கோளாகக் கொள்ள வேண்டும். ஆனால், நேற்றைய பேட்டியில் உங்கள் பதில்கள், ஏதோ மூன்றாம் தர அரசியல்வாதியின் பதில்களைப் போன்று இருந்தது. எங்களைப் போன்ற இசுலாமியர்களின் மனதில் நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஊழலும், மதுவும் அழிக்கப்பட வேண்டும் என்பதிலே மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதை ஒழிப்பதற்கு உயரிய சித்தாந்தமுடைய மக்களும் இருக்க வேண்டும். அவர்கள் இருந்தால் தான் உங்கள் கனவுகள் உண்மையாகும். உங்களின் மக்கள் நலக் கூட்டணி மது ஒழிப்பு போராட்டம் நடத்துவதற்கு முன்னாலேயே எங்களின் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், போதை விழிப்புணர்வுப் பிரட்சாரத்தைத் தமிழகமெங்கும் நடத்தினோம் என்பது இவ்வேளையில் குறிப்பிடுகிறேன்.எங்களைப் போன்றோர் மதுவை விடவும் மத துவேசத்தையே மிகப் பெரும் அச்சுருத்தலாகக் கருதுகிறோம்.

வெற்றி பெறுவது முக்கியமில்லை. அவர்களை இயக்குபவர்கள் யார் என்பது தான் முக்கியம் என தமிழக பிஜேபி தலைவர்களில் ஒருவரான மத்திய அமைச்சர் பொன்னார் அவர்களின் கருத்தை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்துகிறோம். இது தான் மதவாதம் தமிழகத்தில் கொல்லைப் புறமாக வருகிறது என்பதற்கான அறிகுறி. அது யாரின் கொல்லை என்பதை தாங்களின் அனுபவத்தைக் கொண்டு அறிய முடியும் என திண்ணமாக நம்புகிறோம்.

மதுவை விடவும் ஊழலை விடவும் மத துவேசம் என்பது மிகப் பெரிய அச்சுருத்தல் இல்லையா? அதற்கான மேக மூட்டம் இந்தத் தேர்தலில் தமிழகத்தில் சூழவில்லையா?

தமிழகத்தில் அதிமுகவின் அடுத்த கட்ட தலைவர் யார்?

இவ்வளவு பெரிய ஜனரஞ்சக இயக்கத்திற்கு ஏன் அடுத்த கட்ட தலைவர் இல்லை?

அதற்கு பின்னால் உள்ள சூட்சுமம் என்ன?
ஜெயலலிதா அவர்களைப் பின்னுக்கு இருந்து இயக்கும் சோ போன்றவர்கள் யார்?

அதிமுகவின் ஜெயலலிதா அவர்களுக்கும் இந்துத்துவா சக்திகளுக்கும் உள்ள உறவு என்ன?
 
உங்கள் கூட்டணியின் ஒட்டு மொத்த ஓட்டு சதவிகிதம் என்ன?
அது நீங்கள் ஆட்சி அமைக்க வழி கோலுமா? இல்லை அதிமுக ஆட்சி அமைக்க வலி கோலுமா?
குறைந்தபட்சம் இந்தத் தேர்தலில் நீங்கள் எதிர்க் கட்சி வரிசையில் அமரக் கூடிய வாய்ப்பாவது இருக்கிறதா?

அப்படி ஒரு வேளை அமர்ந்தால், பிஜேபியுடன் எங்களுக்கு எந்த கசப்புணர்வும் இல்லை. கம்யூனிஸ்டுகள் இருப்பதால் தான் பிஜேபி இந்தக் கூட்டணிக்கு வரவில்லை என விஜய காந்தின் அனைத்து முடிவுகளையும் தீர்மாணிக்கும் பிரேம லதா விஜய காந்தின் பதிலுரைக்கிற பொழுது, விஜய காந்திடத்தில் மத துவேசத்திற்கான எதிர்ப்பை எதிர் பார்க்க முடியுமா?

இசுலாமிய கட்சிகள் தவறான முடிவெடுத்திருக்கலாம், ஆனால் அது ஒட்டு மொத்த இசுலாமியர்களின் முடிவாக எண்ணி இந்துத்துவாவைப் பற்றிய பாண்டேவின் கேள்வியை கண்டு கொள்ளாத தனம் தான், உங்களின் பதிலில் நேற்று பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. அது தான் உங்களின் உள்ளார்ந்த நிலையா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்கு இறைவன் நாடினால் காலம் பதில் சொல்லும்.

ஒரு நல்ல அரசியல்வாதியின் சுவாசம் மாறுகிறதோ என்கிற அச்சம் தொற்றிக் கொண்டு விட்டது.

- தோழமையுடன், முனீப் அபுஇக்ராம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top