vkrnajur vkrnajur Author
Title: பாலிமர் டிவி பேட்டியில் பாதியில் வெளிவந்தது ஏன்? வைகோவின் விளக்கம்
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
திருச்சியில் வைகோ அளித்த விளக்கம் : பாலிமர் கண்ணன் எனக்கு சிறந்த நண்பர். அவர் பேட்டி ஆரம்பிக்கும் முன்னரே, கேப்டன் அப்படி தகுதியான தலைவர் ...
திருச்சியில் வைகோ அளித்த விளக்கம் : பாலிமர் கண்ணன் எனக்கு சிறந்த நண்பர். அவர் பேட்டி ஆரம்பிக்கும் முன்னரே, கேப்டன் அப்படி தகுதியான தலைவர் இல்லை.
அவருடன் கூட்டு சேர்ந்திருப்பதால், உங்களை எல்லாரும் ஏசுறான். உங்களுக்கு ஓட்டு கிடைத்தாலும் உங்கள் அணிக்கு எவனும் ஓட்டு போட மாட்டான் என்றார்.
ஒரு பெண்ணை பார்த்து நீ கற்புள்ளவளா? என்பதை போன்ற கேள்வி, என்னை பார்த்து, 1,500 கோடி ரூபாய் பணம் வாங்கி கொண்டேன் என்ற கேள்வி.
ஒரு பெண்ணை பார்த்து அப்படி கேட்கும் போதே, அவளின் கற்பை சந்தேகத்திற்கு உரியதாக்கிவிடுகிறது. அதுபோல, இந்த கேள்விக்கு நான் பதிலளித்து இருந்தால், கேள்விதான் பிரதானமாக இருக்கும். என்னுடைய பதில் பொதுமக்களிடம் எடுபட்டிருக்காது.
திமுகவை கைப்பற்ற துடிக்கும் கார்ப்பரேட் நிறுவனம் தான் (ஸ்டாலின் வகையறா) என்னை பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்புகிறது.
கண்ணனின் கேள்விக்கு, ‘கார்ப்பரேட்டுகளிடம் இருந்து நீங்கள் மாதந்தோறும் 5 லட்ச ரூபாய் வாங்குகிறீர்கள்’ என்று எனக்கு வரும் தகவல் உண்மையா? என்று கேட்டிருந்தால் அவர் என்ன செய்திருப்பார்.
நான் அவரை அவமானப்படுத்த விரும்பவில்லை. அவரை மதிக்கும் விதமாக பேட்டியில் இருந்து விலகுவதாக மரியாதையாக கூறி விலகினேன். நாங்கள் கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர்கள்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top