காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: பாகிஸ்தானுக்கு இந்தியர்கள் ஆதரவு தெரிவிக்க மாட்டார்களா?
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ஃபேஸ் புக் நிறுவனம் கிரிக்கெட் அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நமது ப்ரொபைல் படத்தை அந்த அணிகளுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும் வசத...
ஃபேஸ் புக் நிறுவனம் கிரிக்கெட் அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நமது ப்ரொபைல் படத்தை அந்த அணிகளுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இதில் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவித்து தேர்வு செய்யும் வகையில் எந்த வசதியும் இடம் பெறவில்லை.
பாகிஸ்தானில் இந்திய வீரர் விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்த அந்நாட்டு இளைஞருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இந்தியாவில் பாகிஸ்தான் குறித்த விவரங்கள் பேசினால் அவர் தேச துரோகி என்று ஒருசில கட்சிகள் முத்திரை குத்தும் நிலையில், பாகிஸ்தானுக்கு இந்தியர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என்று ஜுகர்பெர்க் நினைத்து விட்டாரா? என வலைவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் பாகிஸ்தான் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து போன்ற இன்னும் பிற அணிகளுக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமைக்கப்படவில்லை.

தேசப்பற்றுக்கும் எந்த அணியை ஆதரிக்கிறோம் என்பதற்கும் வித்தியாசம் இருக்கின்றது என்றும் வலைவாசிகள் பேசி வருகிறார்கள். 

thanks - ns7.tv/ta/

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top