vkrnajur vkrnajur Author
Title: உலகச்செய்திகள் நான்கு வயது குழந்தையை ஒன்றை பெட்டியில் அடைத்து வைத்து விமானத்தில் பயணித்த பெண் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
துருக்கியில் இருந்து பிரான்சுக்கு பெண் ஒருவர் தனது நான்கு வயது குழந்தையை , கையில் எடுத்துவரும் பெட்டியில் வைத்து விமானத்தில் பயணித்தது கண்டு...
துருக்கியில் இருந்து பிரான்சுக்கு பெண் ஒருவர் தனது நான்கு வயது குழந்தையை , கையில் எடுத்துவரும் பெட்டியில் வைத்து விமானத்தில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் பெண்ணின் காலடியில் வைத்திருந்த அந்தப் பை அசைய ஆரம்பித்ததை அடுத்து, அந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் சென்ற சக பயணிகள் அதைக் கண்டுபிடித்தனர்.

பிரான்ஸில் வசித்து வரும் அந்தப் பெண், ஹைத்தியைச் சேர்ந்த இந்தக் குழந்தையை தத்தெடுக்க முயன்று கொண்டிருக்கிறார் என்றும், ஆனால் அதற்கான சரியான ஆவணங்கள் அவரிடம் இல்லை என்றும் கருதப்படுகிறது.

இஸ்தான்புல்லில் அவர் பயண மாற்றும் பகுதியில் ( ட்ரான்ஸிட் பகுதி) இருந்த அந்தப் பெண்ணை முதலில் அவர் செல்லவிருந்த விமானத்தில் குழந்தையுடன் ஏறவிடாமல் தடுத்திருக்கிறார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. பின்னர் அவர் ஒரு புதிய டிக்கெட்டை வாங்கிக்கொண்டு குழந்தையை பெட்டியில் வைத்து மறைத்துக் கொண்டு , அந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் ஏறியிருக்கிறார்.

இந்தக் குழந்தையை இப்போது சமூக நலத்துறையின் காப்பகம் ஒன்றுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அந்தப் பஎண் பாரிஸ் விமான நிலையத்த்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் மீது குற்ற வழக்கு எதுவும் பதியப்படவில்லை.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top