Mohammed Farook Mohammed Farook Author
Title: "பாரத் மாதா கி ஜெய்" முழக்கத்திற்கு எதிராக தடை உத்தரவு
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
இஸ்லாமியர்கள், "பாரத் மாதா கி ஜே" என்ற முழக்கத்தை எழுப்பக்கூடாது என, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜாமியா நிசாமியா அமைப்பு ஃபத்வா பிறப...
இஸ்லாமியர்கள், "பாரத் மாதா கி ஜே" என்ற முழக்கத்தை எழுப்பக்கூடாது என, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜாமியா நிசாமியா அமைப்பு ஃபத்வா பிறப்பித்துள்ளது.

பாரதத் தாயை புகழும் "பாரத் மாதா கி ஜே" என்ற கோஷத்தை முழங்காதவர்கள், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என, அண்மையில் பா.ஜ.க. பொதுச்செயலர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியிருந்தார்.  இதற்கு பதிலளித்த ஹைதராபாத் எம்.பி. ஓவைசி, கழுத்தில் கத்தியை வைத்தாலும், "பாரத் மாதா கி ஜே" முழக்கத்தை கூற மாட்டேன் என்றார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜாமியா நிசாமியா அமைப்பு ஃபத்வா ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில், இஸ்லாமிய மார்க்கத்தில் "பாரத் மாதா கி ஜே" முழக்கம் தடை செய்யப்பட்டிருப்பதாகவும், எனவே, இஸ்லாமியர்கள் அதை எழுப்பக்கூடாது என்றும் கட்டளை பிறப்பித்துள்ளது.

எந்த ஒரு மண்ணோ, விலங்கோ அல்லது மற்ற பொருட்களோ மனிதனை பெற்றெடுப்பதில்லை என கூறியுள்ள அந்த அமைப்பு, மக்கள் மீது நம்பிக்கையை திணிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top