Mohammed Farook Mohammed Farook Author
Title: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடவுள்ளதாக டிராபிக் ராமசாமி அறிவிப்பு
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட போவதாக என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவ...
சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட போவதாக என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனையும், அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனையும் டிராபிக் ராமசாமி சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிட கட்சிகளை எதிர்ப்பதற்கு பாஜக, தேமுதிக மற்றும் தமாகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிடப்போவதாகவும், அதிமுக அரசை அகற்ற வேண்டும் என நினைப்பவர்கள் தன்னை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றும் ராமசாமி வேண்டுகோள் விடுத்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top