vkrnajur vkrnajur Author
Title: ஜெ. புகைப்படம் அடங்கிய பேனர்கள் அகற்றம் அலுவலகங்களுக்கு சீல் - தேர்தல் ஆணையம் அதிரடி!!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் கொண்ட பேனர்கள் அதிரடியாக அப்புறப்படுத்தியும், அலுவலங்களுக்கு சீல் வைத்தும் ...
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் கொண்ட பேனர்கள் அதிரடியாக அப்புறப்படுத்தியும், அலுவலங்களுக்கு சீல் வைத்தும் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.  
தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இதில் தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மே 16–ந்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22–ந்தேதி தொடங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை மே 19–ந்தேதி நடைபெறும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. இதையொட்டி தேர்தலுக்காக அமைக்கப்பட்டு இருந்த சோதனைச் சாவடிகள், கண்காணிப்புக்கான பறக்கும் படைகள் உடனடியாக செயல்படத் தொடங்கியுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இரவில் ஆங்காங்கே சாலைகளில் சென்ற வாகனங்களை நிறுத்தி தேர்தல் ஆணைய அதிகாரிகளும், போலீசாரும் சோதனை மேற்கொண்டனர்.

சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் கொண்ட அரசு நோட்டீசு பலகைகள், அரசு திட்டங்களை விளம்பரப்படுத்தும் கட்–அவுட்கள் கோட்டை வளாகத்தில் இருந்த ஜெயலலிதா புகைப்படம் கொண்ட பேனர்கள் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்டன.

அமைச்சர்களும் தற்போது அரசு கார்களை உபயோகப்படுத்தாமல் தங்களது சொந்த காரிலேயே சென்று வருகின்றனர். இதேபோல் எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி, தலைவர்கள், கவுன்சிலர்கள் அலுவலகங்களையும் காலி செய்து ‘சீல்’ வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அங்குள்ள பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு ஒரு நாள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதனால் அரசு பதவியில் உள்ள அரசியல்வாதிகள் தங்களது சொந்த அலுவலகங்களுக்கு இடம் பெயர்கின்றனர்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களின் அறைகள் பூட்டி ‘‘சீல்’’ வைக்கப்படுகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top