vkrnajur vkrnajur Author
Title: அமெரிக்காவில் போதைப்பொருளால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
போதைப்பொருள் பயன்பாடு காரணமாக, உயிரிழப்போர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச போதைப் பொரு...
போதைப்பொருள் பயன்பாடு காரணமாக, உயிரிழப்போர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் நடைபெறும் போதைப் பொருள் கடத்தல் குறித்த அறிக்கையை, சர்வதேச போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு மெக்சிகோவில் நேற்று வெளியிட்டது. இதனை வெளியிட்டு பேசிய அந்த அமைப்பின் பிரதிநிதி அலெஜாண்ட்ரோ மோஹர், அமெரிக்காவில் விற்கப்படும் ஹெராயின் போதைப் பொருளின் பெரும்பகுதி, ஆப்கனிஸ்தான் மற்றும் மெக்சிகோவில் இருந்து கடத்திவரப்படுபவை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஹெராயின் கடத்தல்காரர்கள் உதவியுடன், ஆப்கானிஸ்தானில், 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் அவை உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் ஐ.நா.,வின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது. இதேபோல், மெக்சிகோவில் ஹெராயின் உற்பத்தி அதிகம் என்றாலும் அந்நாட்டில் அதன் பயன்பாடு மிகவும் குறைவாக இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சர்வதேச அளவில், உலக மக்கள் தொகையில் 4ல் 3 பகுதி மக்களுக்கு போதைப் பொருள் கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. சர்வதேச போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top