vkrnajur vkrnajur Author
Title: தேசிய கீதம் அவமதிப்பு?: அமிதாப் பச்சன் மீது போலீஸ் புகார்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீது தேசிய கீதத்தை தவறாக பாடினார் என டெல்லி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ...
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீது தேசிய கீதத்தை தவறாக பாடினார் என டெல்லி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்னர் இரு நாட்டு தேசிய கீதம் ஒலிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஒலித்தட்டுக்கு பதிலாக பிரபல நடிகர் அமிதாப் பச்சனை பாட வைத்தனர். இந்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி தேசிய கீதத்தை 52 விநாடிக்குள் பாடி முடிக்க வேண்டும். ஆனால் அமிதாப் பச்சன் சில இடங்களில் நிறுத்தி 1 நிமிடம் 22 விநாடிகள் வரை பாடினார் என அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அசோக் நகர் காவல் நிலையத்தில் உல்காஷ் என்பவர் இன்று புகார் அளித்தார். மேலும் அவரது புகாரில் அமிதாப் பச்சன் தேசிய கீதம் பாடும் போது, தவறான வார்த்தைகளை பயன்படுத்தினார் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே அவர் தேசிய கீதம் பாடியதற்கு ரூ. 4 கோடி பணம் வாங்கியதாக சமூக வலைதளத்தில் பலர் திட்டி தீர்த்தனர். ஆனால் அவர் எந்த பணமும் வாங்கவில்லை, தனது சொந்த பணத்தில் ரூ. 30 லட்சம் இதற்காக அவர் தான் செலவு செய்தார் என கொல்கத்தா கிரிக்கெட் சங்க தலைவர் கங்குலி விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top