vkrnajur vkrnajur Author
Title: குண்டுவெடிப்பு அச்சுறுத்தலை கண்டுக்கொள்ளாமல் சுற்றுபயணம் செல்லும் - மோடி!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
குண்டுவெடிப்பு அச்சுறுத்தலை கண்டுகொள்ளாமல் பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரோபியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்...
குண்டுவெடிப்பு அச்சுறுத்தலை கண்டுகொள்ளாமல் பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரோபியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

சமீபத்தில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் 32 பேர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பால் ஏற்பட்டுள்ள தீவிரவாதிகள் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு பிரதமர் தனது பயணத்தை ரத்து செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் குண்டு வெடிப்பை பொருட்படுத்தாமல் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு நேற்றிரவு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் பிரஸ்ஸல் நகருக்கு புறப்புட்டுச் சென்றார். இன்று பிரஸ்ஸல்ஸ் நகரில், இந்திய-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதில் மோடி கலந்து கொள்கிறார்.

பின்னர் பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேலுடன் பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருவரும் சேர்ந்து, உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி கருவியை தொடங்கி வைக்கிறார்கள். பிரசல்ஸ் நகரில் இருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு பிரதமர் மோடி செல்கிறார். 

அங்கு 31 மற்றும் ஏப்ரல் 1-ந் தேதிகளில் நடைபெறும் அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். அமெரிக்க பயணத்துக்கு பிறகு, பிரதமர் மோடி, சவுதி அரேபிய தலைநகர் ரியாத்துக்கு செல்கிறார். அங்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top