காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: இலவச டிரைவிங் பயிற்சி!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதால், டிரைவிங் (ஓட்டுனர்) பயிற்சி பெறுவது மிகவும் அத்தியாவசியமானது. அத்துடன் அதிகமான வேல...
வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதால், டிரைவிங் (ஓட்டுனர்) பயிற்சி பெறுவது மிகவும் அத்தியாவசியமானது. அத்துடன் அதிகமான வேலைவாய்ப்புகளையும் பெற்றுத்தரக் கூடியதாகும்.

தமிழ்நாடு அரசு திறன்மேம்பாட்டுக் கழகம், தற்போது சாலை போக்குவரத்து நிறுவனத்தின் மூலம் இலவச இலகுரக வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 960 நபர்களுக்கு பயிற்சி அளித்து ஓட்டுனர் உரிமம் பெற்றுத்தர உள்ளனர். ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 6 வார காலம் ஓட்டுனர் பயிற்சி வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 10-3-2016 தேதியில் 20 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கண்ணாடி அணியாமல் கண்பார்வை திறன் 6/6 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும். நிறக்குருடு பாதிப்பு இருக்கக்கூடாது.

விருப்பம் உள்ளவர்கள், மாதிரி விண்ணப்ப படிவத்தை நிரப்பி, பயிற்சி பெற விரும்பும் மையத்தின் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேவையான சான்று நகல்கள் இணைக்க வேண்டும். 10-3-2016-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

சென்னை மற்றும் திருச்சி சாலை போக்குவரத்து நிறுவன மையங்கள், ஈரோடு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது.

இது பற்றிய விவரங்களை    www.irtchennai.in   என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top