vkrnajur vkrnajur Author
Title: ஷரீஅத் சட்ட விவகாரம்: மணிஷ் திவாரிக்கு முஸ்லிம் லீக் கண்டனம் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீ...
முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.காதர் மொய்தீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''முஸ்லிம் ஷரீஅத் சட்டம் இறைவனால் உருவாக்கப்பட்டது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. இதன் தெய்வீகத்தன்மையை இந்தச் சட்டத்தை நம்புபவர்களால் மட்டுமே கணிக்க முடியும்.
ஆனால், ஷரீஅத் சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. முஸ்லிம் அல்லாத திவாரி, முஸ்லிம்களின் தெய்வீக ஷரீஅத் சட்டம் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்த்திருக்க வேண்டும். பொது சிவில் சட்டம் என்பது இந்திய சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும். எனவே, அதனை ஏற்க முடியாது'' என்று காதர் மொய்தீன் கூறியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top