காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: துபாயில் நடைபெற்ற கண்காட்சியில் கற்களை பயன்படுத்தி செய்யப்பட்ட காகிதத்தில் அச்சிடப்பட்ட திருக்குரான் பார்வைக்கு வைக்கப்பட்டது.!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
  துபாயில் நடைபெற்ற கண்காட்சியில் கற்களை பயன்படுத்தி செய்யப்பட்ட காகிதத்தில் அச்சிடப்பட்ட திருக்குரான் பார்வைக்கு வைக்கப்பட்டது.   ச...
 
துபாயில் நடைபெற்ற கண்காட்சியில் கற்களை பயன்படுத்தி செய்யப்பட்ட காகிதத்தில் அச்சிடப்பட்ட திருக்குரான் பார்வைக்கு வைக்கப்பட்டது.
 
சர்வதேச அளவில் பெரும்பாலான அலுவலகங்கள், கல்வி நிலையங்கள்,ஊடகங்கள் என பல்வேறு துறைகள் கணிணிமயமாகி விட்டாலும் இன்று வரை துறை சார்ந்த பணிகளுக்கு காகிதத்தை பயன்டுத்துவது என்பது உலகெங்கிலும் தவிர்க்க முடியாத அளவில் அதிகமாகத்தான் உள்ளது.

குறிப்பாக மரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க காகித பயன்பாட்டை குறைக்க சர்வதேச சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் அதன் பயன்பாடு குறையவில்லை. ஆயிரம் கிலோ காகிதத்தை உருவாக்க வேண்டுமென்றால், அதற்கு ஒரு மடங்கு அதிக எடையில் மரங்கள் தேவை. 

மரங்களை அழிவதை தடுப்பதற்கு மரத்தை மூல பொருளாக கொண்டு செய்யப்படும் காகிதங்களின் பயன்பாடு குறைய வேண்டும் என்று உலகம் முழுவது சுற்று சூழல் ஆர்வலர்கள் பாடுபடுகின்றனர்.இதன் மூலம் மரங்கள் ,தண்ணீர் பயன்பாடு , காற்று மாசுபாடு குறையும் என தெரிவிக்கின்றனர் எனவே இதற்கு மாற்றாக மரங்களை அழிக்காமல் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தாத வகையில் கற்களை பயன்படுத்தி காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம் உலகில் அறிமுகமாகியுள்ளது. 

கற்களை அரைத்து மாவாக்கி அதனோடு சில மூல பொருட்களையும் சேர்ந்து இயந்திரங்கள் மூலம் இந்த காகிதங்கள் உருவாக்கப்படுகிறது, இந்த காகிதங்கள் எளிதில் கிழியாது,நீரில் நனைந்தாலும் வீணாகாது குறிப்பாக சுற்று சூழலுக்கு மிகவும் ஏற்றது என சொல்லப்படுகிறது. 

துபாயில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற உலக காகித கண்காட்சியில் சர்வதேச அளவில் ஏராளமான காகித நிறுவனங்கள் பங்கேற்றன.இதில் புதிய தொழிநுட்பத்தில் கற்களை பயன்படுத்தி செய்யப்பட்ட காகிதங்கள்,பைகள்,திருக்குரான் உள்ளிட்டவை பார்வைக்கு வைக்கப்பட்டன. 

எதிர்காலத்தில் இதன் பயன்பாடை அதிகரிக்க உலக நாடுகள் முன் வரவேண்டும் வேண்டும் என சுற்று சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் பட விளக்கம். துபாயில் நடைபெற்ற கண்காட்சியில் கற்களை பயன்படுத்தி செய்யப்பட்ட காகிதத்தில் அச்சிடப்பட்ட திருக்குரான் பார்வைக்கு வைக்கப்பட்டது.
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top