Mohamed Farook Mohamed Farook Author
Title: தேமுதிக-மநகூ வெற்றி பெற்றால் வைகோவிற்கு துணை முதல்வர் பதவி!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தேமுதிக மக்கள் நல கூட்டணி வெற்றி பெற்றால் மதிமுக பொது செயலாளர் வைகோவிற்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது....
தேமுதிக மக்கள் நல கூட்டணி வெற்றி பெற்றால் மதிமுக பொது செயலாளர் வைகோவிற்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது.

கோவில்பட்டியில் நடைபெற்ற தேமுதிக மக்கள் நலக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் பேசிய தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்கே சுதிஷ் தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், விஜயகாந்த் முதலமைச்சராக பொறுப்பேற்கும் விழா மதுரையில் நடைபெறும் என்றார்.

அதே போன்று துணை முதலமைச்சர் பதவி மதிமுக பொது செயலாளர் வைகோவிற்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது நீங்கலாக நிதியமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனுக்கும் வழங்கப்படும் என குறிப்பிட்டார்.

மேலும் கல்வித்துறை, விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனுக்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார். ஆட்சிக்கு வந்ததும் கிராமங்களில் இலவச இண்டர்நெட் வசதி செய்துகொடுக்கப்படும் என்றும் சுதீஷ் உறுதியளித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top