Mohamed Farook Mohamed Farook Author
Title: சாதிக் பாட்சா தற்கொலை குறித்து கருத்து கூற ஸ்டாலின் மறுப்பு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொடர்புடைய சாதிக் பாட்சாவின் தற்கொலை குறித்து கருத்து கூற, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மறுத்து விட்டார...
2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொடர்புடைய சாதிக் பாட்சாவின் தற்கொலை குறித்து கருத்து கூற, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மறுத்து விட்டார்.

2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ.ராசாவுக்கு நெருக்கமாக இருந்த சாதிக் பாட்சாவை சிபிஐ விசாரணைக்கு அழைத்திருந்தது. அதை தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டார். சாதிக் பாட்சாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி அவரது குடும்பத்தினர் "செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தாயே" என்று சுவரொட்டிகள் அடித்து விளம்பரம் செய்தனர்.

பாட்சாவின் தற்கொலைக்கு திமுகவை மறைமுகமாக குற்றம் சாட்டுவது போல இந்த விளம்பரங்கள் இருப்பதால் திமுக வட்டாரத்தில் இவை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சாதிக் பாட்சா தற்கொலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கருத்து கூற மறுத்துவிட்டார்.

அதிமுகவின் தூண்டுதலால், வேண்டுமென்றே தேர்தல் நேரத்தில் இந்த பிரச்னை கிளப்பப்படுவதாக திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருந்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top