vkrnajur vkrnajur Author
Title: எகிப்தில் கடத்தப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள் விடுவிப்பு - கடத்தியவர் கைது !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
எகிப்தில் கடத்தப்பட்ட விமானம் சைப்ரஸ் நாட்டில் உள்ள லார்னக்கா (Larnaca) விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் ம...

எகிப்தில் கடத்தப்பட்ட விமானம் சைப்ரஸ் நாட்டில் உள்ள லார்னக்கா (Larnaca) விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்.

எகிப்தில் எம்.எஸ். 181 என்ற விமானம் பணியாளர்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அலெக்சாண்ட்ரியாவிலிருந்து கெய்ரோவை நோக்கிப் பயணம் செய்தது. இந்த விமானத்தை கடத்துவதாக, உடலில் வெடிகுண்டுகளைக் கட்டியிருந்த நபர் ஒருவர் திடீரென அறிவித்தார். 

விமானத்தை சைப்ரஸ் நாட்டின் லார்னக்கா நகருக்குத் திருப்பும் படியும் அவர் விமானிக்குக் கட்டளையிட்டார். இதையடுத்து லார்னக்கா திரும்பிய விமானம் அங்கு தரையிறங்கியுள்ளது. 

விமான நிலையத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பாதுகாப்புப் படையினர், அங்கிருந்து புறப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். 

இதே போல் அங்கு வரும் விமானங்கள் பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. விமானத்தைக் கடத்திய நபர் முதலில் துருக்கி நாட்டிற்குப் போகவிரும்பியதாக செய்திகள் வெளியான நிலையில், சைப்ரசில் உள்ள அவரது மனைவியைப் பார்க்கவேண்டும் எனக் கோரியதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top