vkrnajur vkrnajur Author
Title: பெரம்பலூர் அருகே சாலையோர பெயர் பலகையில் கார் மோதி விபத்து: தந்தை மகள் பலி, தாய்படுகாயம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பெரம்பலூர் அருகே சாலையோர பெயர் பலகையில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் தந்தையும், மகளும் பரிதாபமாக உயிரிழந்ததோடு, தாய் படுகாயத்துடன் மருத்துவ...
பெரம்பலூர் அருகே சாலையோர பெயர் பலகையில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் தந்தையும், மகளும் பரிதாபமாக உயிரிழந்ததோடு, தாய் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வடலூர் சேராக்குப்பத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (வயது 40), இவர் அதே பகுதியில் ரைஸ் மில்லும், அரிசி கடையும் நடத்தி வருகிறார்.
இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி பி.இ., பயோடெக் முதலாமாண்டு படித்து வரும் மூத்த மகள் சாந்திதேவியை(19) பார்ப்பதற்காக இன்று காலை
வடலூரிலிருந்து சுந்தரபாண்டியன் தனது மனைவி தெய்வானை(39) இளைய மகள் வர்ஷாதேவி(12) ஆகியோருடன் காரில் பெரம்பலூர் வந்து மூத்த மகளான சாந்திதேவியை பார்த்து விட்டு, இன்று மாலை காரில் வடலூரை நோக்கி, திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதி அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள இரும்பினாலான தகவல் பலகையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுந்தரபாண்டின், அவரது மகள் வர்ஷாதேவி மற்றும் மனைவி தெய்வானை ஆகியோர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சுந்தரபாண்டியனும், வர்ஷாதேவியும் சிகிச்சையின் போது பரிதாபமாக உயிரிழந்தனர். தெய்வானை மேல்சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் மங்களமேடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சிட்ரிக்மேனுவல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top