vkrnajur vkrnajur Author
Title: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம்? - சீமான்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
  சுத்தமான குடிநீர், தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியவை தான் எங்களது கொள்கையாக எப்போதும் இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் ...
 
சுத்தமான குடிநீர், தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியவை தான் எங்களது கொள்கையாக எப்போதும் இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார். 

திருச்சி பீமநகரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘’வருகிற சட்ட மன்ற தேர்தலில் நாம்தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அனைத்து கட்சிகளும் தனி தனியே போட்டியிட வேண்டும்.
ஓட்டு வங்கி விகிதாச்சார அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். எங்கள் கருத்துடன் ஒத்த கருத்துடையவர்கள் எங்களுடன் கூட்டணி சேரலாம்.
தெலுங்கானாவை தெலுங்கர்கள் ஆளும் போது தமிழர்கள் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என குரல் கொடுப்பதில் தவறில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்ற செயல்பாட்டு அறிக்கை வருகிற 20ஆம் தேதி வெளியிடப்படும். சுத்தமான குடிநீர், தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியவை தான் எங்களது கொள்கையாக எப்போதும் இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top