vkrnajur vkrnajur Author
Title: முதலமைச்சர் சொத்துக்கள் திடீர் முடக்கம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
இமாச்சல பிரதேச மாநில முதல்வர் வீரபத்ரசிங் சொத்துக்களை அமலாக்கத்துறை முடிக்கியது.   கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி...
இமாச்சல பிரதேச மாநில முதல்வர் வீரபத்ரசிங் சொத்துக்களை அமலாக்கத்துறை முடிக்கியது.  
கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய உருக்குத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் வீரபத்ரசிங். தற்போது இவர், இமாச்சல பிரதேச மாநில முதல்வராக உள்ளார்.
அப்போது, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் செயல்பட்ட உருக்க ஆலைகளுக்கு அனுமதி கொடுப்பது, சுரங்கங்களை ஏலம் விடும் விவகாரங்களில் முறைகேடாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு, சிபிஐ  விசாரணை நடத்தியது. இதில், வீரபத்ர சிங் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து தெரிய வந்தது.
இதனையடுத்து, வீரபத்ரசிங், அவரது மனைவி பிரதீபா சிங் இருவர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், வீரபத்ரசிங் பண பரிவர்த்தனைகளில் மோசடி செய்துள்ளதை தற்போது, மத்திய அமலாக்கத்துறை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்தது. மேலும் வீரபத்ர சிங்கின் சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில், டெல்லியில் வீரபத்ர சிங்குக்கு சொந்தமான 2 வீடுகள், வங்கியில் உள்ள பணம் மற்றும் இன்சூரன்ஸ் பத்திரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர். இதன் மதிப்பு சுமார் ரூ.8 கோடி ஆகும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top