காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: அருமையான வீரராக மாறியுள்ளார், கோலியை பாராட்டிய டோனி!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தொடர்ந்து  பெற்ற 3-வது வெற்றியாகும். ஏற்...
ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தொடர்ந்து  பெற்ற 3-வது வெற்றியாகும். ஏற்கனவே வங்காளதேசம், பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. ஹாட்ரிக் வெற்றி மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

யுவராஜ்சிங்கின் ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. நான்  ஏற்கனவே  கூறியது போல் ஆடுகளத்தில் நிலைத்து நின்றால் அவர் தனது  முழு திறமையையும் வெளிப்படுத்தி விடுவார். அவரது அணுகுமுறை சிறப்பாக இருந்தது. சரியான  நேரத்தில் அவர் ஷாட்களை  வெளிப்படுத்தினார். அவர் சிக்சர்களை விளாசினார். அவரது விருப்பத்துக்கு ஏற்றவாறு சிக்சர்கள் அடிக்க கூடிய திறமை இன்னும் இருக்கிறது.

வீராட் கோலியை இந்த நேரத்தில்  பாராட்டாமல்   இருக்க முடியாது. அவரது ஆட்டம் எப்போதுமே  அணிக்கு முக்கிய பங்காக இருக்கிறது. கோலி நல்ல முதிர்ச்சியான வீரராக மாறியுள்ளார். தனது ஆட்டத்தில் மேலும் மெருகேற்றியுள்ளார்.கடந்த காலங்களில் கற்றுக் கொண்ட அனுபவங்கள் மூலம் தனது ஆட்டத்திறனை மேம்படுத்தியுள்ளார்.

யார் டார்கெட், எது டார்கெட், நமது பலம் என்ன என்பதை மிகத் தெளிவாக அறிந்து வைத்து ஆடுகிறார்.நமது பலம் என்ன என்று தெரியாமல், நமக்கு பலம் இல்லாத பகுதிகளில் கால் வைப்பது அபாயகரமானதாகும். அதை கோலி ஒருபோதும் செய்வதில்லை. அந்த வகையில் அவர் அருமையான வீரராக மாறியுள்ளார் என கூறினார்.

இந்திய அணி கடைசி ’லீக்; ஆட்டத்தில் ஐக்கிய எமிரேட்சை நாளை எதிர் கொள்கிறது.  ஐக்கிய அரசு எமிரேட்சை வீழ்த்தி  4-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன்  இந்தியா உள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top