Mohammed Farook Mohammed Farook Author
Title: பாஜக தான் மோசமான தேச விரோதி - அர்விந்த் கேஜ்ரிவால்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
பாஜக தான் மோசமான தேச விரோதி என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் விமர்சித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன...
பாஜக தான் மோசமான தேச விரோதி என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) கடந்த பிப்ரவரி 9-ம் தேதி தேச விரோத முழக்கம் எழுப்பியர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்று கேஜ்ரிவால் கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவர் கடந்த 29-ம் தேதி கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியை விட நான் மிகப்பெரிய தேச பக்தன். ஜேஎன்யூ வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதன் மூலம், காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹ்பூபா முப்தி ஏமாற்றம் அடைவதை பாஜக விரும்பவில்லை” என்றார்.

இந்நிலையில் ஜேஎன்யூ வளாகத்தில் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பல்கலைக்கழக குழு தனது அறிக்கையில், “தேச விரோத முழக்கம் எழுப்பியவர்கள் வெளியாட்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கததில், “பாஜக தான் மோசமான தேச விரோதி. ஜேஎன்யூ வளாகத்தில் தேச விரோத முழக்கம் எழுப்பியவர்களை பாஜக காப்பாற்ற முயற்சிப்பது ஏன்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top