Mohamed Farook Mohamed Farook Author
Title: வெளிநாடு செல்லும் ஆசையில் போலி விளம்பரங்களை கண்டு ஏமாறும் இளைஞர்கள்!! - கண்டுகொள்ளுமா காவல்துறை?
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் கிராமப்புறங்களில் வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பொய்யான விளம்ப...
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் கிராமப்புறங்களில் வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பொய்யான விளம்பரங்களை வெளியிட்டு ஏமாற்றும் மோசடி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

தென்மாவட்டங்களில் போதிய தொழிற்சாலைகள் இல்லாததால் வேலையின்றி இளைஞர்கள் பலர் வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கு வேலை தேடி செல்கின்றனர். 

இது தவிர ஒரு சிலர் வெளிநாடுகளில் வேலைக்கு ஆசைப்பட்டு செல்கின்றனர். இவர்களை குறிவைத்து தங்குமிடம் இலவசம், ஓவர்டைம் பணிக்கு கூடுதல் ஊதியம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் இளைஞர்கள் கவரப்படுகின்றனர். 

பெரும்பாலான விளம்பரங்களில் செல்போன் நம்பர் மட்டுமே தொடர்புக்கு கொடுக்கப்படுகிறது. அரசு அனுமதி உண்டா, உண்மையிலேயே அது வேலைவாய்ப்பு நிறுவனமா என யாருக்கும் தெரிவதில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசு அனுமதி பெற்ற நிறுவனம் மட்டும்தான் விளம்பரம் செய்ய வேண்டும் எச்சரித்ததோடு, போலியான விளம்பரங்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 


இதனால் போலி புரோக்கர்கள் தலைமறைவாகிவிட்டனர்.தற்போது மீண்டும் தலையெடுத்துள்ள அவர்கள் வெளிநாடுகளில் வேலைக்கு ஆயிரக்கணக்கானோர் தேவை என்று நகரம், கிராமம் என பல இடங்களில் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். 

டூரிஸ்ட் விசாவை கொடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் இத்ததைய நிறுவனங்களை நம்பிச் செல்லும் பலர் அங்கு பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி சிறையில் அவஸ்தைப்படுகின்றனர்.

கடந்த சில இரு ஆண்டுக்கு முன் மலேசிய விமானம் காணாமல் போன சம்பவத்தையடுத்து மலேசியா உள்ளிட்ட நாடுகள் விசாவிற்கு கடுமையான கெடுபிடிகளை விதித்துள்ளன. இது தெரியாமல் இளைஞர்கள் பலரும் வட்டிக்கு வாங்கி புரோக்கர்களுக்கு கொடுத்து ஏமாந்தனர்.

கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தில் இருந்து மலேசியா சென்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இருவர் உட்பட 32 பேர் போலி விசா மூலம் வந்தவர்கள் எனக்கூறி மலேசியா சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் அவர்களின் குடும்பத்தினர் வறுமையில் வாடியதோடு மட்டுமல்லாமல் மனஉளைச்சலுக்கும் ஆளாகினர்.


ஒருசிலர் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் போலி விளம்பரங்களின் பின்னணி குறித்து ஆராயாமல் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மனைவியை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு வெளிநாடு சென்று விடுகின்றனர். 

அங்கு சென்ற பிறகு அவர்கள் குறிப்பிட்ட வேலை கிடைக்காமலும், 16 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்கப்படுவதாலும் உடல் சோர்வு ஏற்படுவதோடு, மனஉளைச்சலும் தொற்றிக் கொள்கிறது. மேலும் ஒருசில இடங்களில் பாஸ்போர்ட்டையும் அவர்கள் பறித்துக் கொள்வதால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றனர்.

அதன்பிறகு மனைவி, உறவினர்களை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம் முறையிட்டு வெளியுறவுத்துறை மூலம் மீட்கப்படுகின்றனர். 


எனவே பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு போலி விளம்பரங்களை கண்டு ஏமாறுபவர்கள் உள்ளூரிலேயே சுய தொழில் தொடங்கி சுயமாக வாழலாம் எனவும், அரசு அனுமதியின்றி விளம்பரங்கள், போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என ஆசைப்படுவோர் தமிழக அரசின் மேன்பவர் கார்ப்பரேசன் மூலம் அறிவிக்கப்படும் அறிவுப்புகளை மட்டும் நம்பி வேலைவாய்ப்பை பெறலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top