காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: திமுக கூட்டணியில் அன்சாரியின் புதிய கட்சி?
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து வெளியேறிய தமிமுன் அன்சாரி, மனிதநேய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை கடந்த வாரம் தொடங்கினார். இந்தக் கட...
மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து வெளியேறிய தமிமுன் அன்சாரி, மனிதநேய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை கடந்த வாரம் தொடங்கினார்.

இந்தக் கட்சி மக்கள் நலக் கூட்டணியில் இணையும் என்று பேசப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் இணைய காங்கிரஸ் மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. புதிய கட்சியின் முதல் அரசியல் மாநாடு சென்னையில் வரும் 26-ம் தேதி நடக்கவுள்ளது.

அதில் திமுக, காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்கவுள்ளதாக தெரிகிறது. இதுபற்றி தமிமுன் அன்சாரியிடன் கேட்டபோது, ‘‘மமகவில் பிளவு ஏற்பட்டபோது பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் எங்களுடனே வந்தனர்.

40 வயதுக்குட்பட்ட இஸ்லாமியர்கள் பலரும் எங்கள் கட்சியில்தான் உள்ளனர். எனவே, கூட்டணிக்காக பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதுபற்றி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு 7-ம் தேதி வெளியாகும்’’ என்றார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top