Mohammed Farook Mohammed Farook Author
Title: தமிழகம் கண்டிராத அதிசயமான முதலமைச்சர் வேட்பாளர்கள்: கருணாநிதி அறிக்கை
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தமிழகம் இதுவரை கண்டிராத அதிசயமான முதலமைச்சர் வேட்பாளர்களாக சிலர் களம் இறங்கியிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அண்ணா, காமரா...
தமிழகம் இதுவரை கண்டிராத அதிசயமான முதலமைச்சர் வேட்பாளர்களாக சிலர் களம் இறங்கியிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அண்ணா, காமராஜரே முதலமைச்சர் வேட்பாளர்களாக தங்களை அறிவித்துக்கொண்டு தேர்தல் களம் கண்டதில்லை என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார். .

இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், திமுக ஆட்சி காலங்களில் நிறைவேற்றப்பட்ட நல திட்டங்கள், மக்கள் மனதில் நீங்காது இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஆட்சியை அகற்றி, திமுக ஆட்சியை அரியணையில் ஏற்ற மக்கள் முடிவு எடுத்து விட்டதாக கூறியுள்ள கருணாநிதி, ஆளுங்கட்சியினரே ஒரு சதித் திட்டத்தை வகுத்து, அதை நிறைவேற்றுவதற்கு, நெஞ்சில் வஞ்சகத்தைத் கொண்ட சிலரைப் பிடித்துப் பிரச்சாரம் செய்ய வைத்து, குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சியின் புரையோடிய புண்களை, போலிப் பட்டாடை போர்த்தி மறைத்து விட்டு, திமுக மோசம் என்ற விஷமப் பிரச்சாரத்தில் ஒரு சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாற்று அரசியல், தி.மு.க. - அ.தி.மு.க. அணிகளுக்குப் போட்டியாக மூன்றாவது அணி, பல முனைப் போட்டி ஆகியவை தமிழகத்தில் ஏற்கனவே பரிசோதித்துப் பார்க்கப்பட்டவைதான் என்றும், இடதுசாரிக் கூட்டணியை விஜயகாந்த் கூட்டணியாக மாற்றியதன் மூலம், இடதுசாரிகள் இத்தனை நாட்களும் எதை மையப் பொருளாகப் பேசினார்களோ, அதையும் அவர்களே கேலிப் பொருளாக்கி விட்டதாகவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

1971ம் ஆண்டு பெற்ற வெற்றியை மிஞ்சும் வகையில் இந்த தேர்தல் வெற்றிக்காக உழைக்க வேண்டும் எனவும் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top