vkrnajur vkrnajur Author
Title: நடுரோட்டில் ஜாலியாக வாக்கிங் போன புலி : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி !(PHOTOS)
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கத்தாரின் தோஹா நகரில், ஏராளமான வாகனங்கள் சாலையில் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென ஒரு வாகனத்தில் இருந்து கீழே குதித்த ஒரு புலி, சாலைய...

கத்தாரின் தோஹா நகரில், ஏராளமான வாகனங்கள் சாலையில் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென ஒரு வாகனத்தில் இருந்து கீழே குதித்த ஒரு புலி, சாலையில் செல்லும் வாகனங்களுக்கிடையே அங்கும் இங்கும் ஓடியது.  

அதைக் கண்டதும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அந்த புலியை ஏராளமானோர் தங்கள் வாகனங்களின் உள்ளே இருந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். அவைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

பொதுவாக வளைகுடா நாடுகளில்உள்ள பெரும் பணக்காரர்கள், தங்களை அதிகாரம் மிக்கவர்களாக காட்டிக் கொள்வதற்காக, புலியை செல்லப் பிரணியாக வளர்த்து வருவது வழக்கம். இந்த புலியையும் அப்படி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது, வாகனத்தில் இருந்து அது கீழே குதித்திருக்கலாம் என தெரிகிறது. அதன்பின் அந்த புலி, அதன் உரிமையாளர் மீட்டு கொண்டு சென்று விட்டார் என்று கூறப்படுகிறது. 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top