Mohamed Farook Mohamed Farook Author
Title: ​நாளை ஓய்வு பெறுகிறார் வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர் ரமணன் நாளை ஓய்வு பெறுகிறார். வானிலை என்றால் தமிழர்களுக்கு முதலில் நினைவுக்கு வருபவர் ரமணன் என்ற...
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர் ரமணன் நாளை ஓய்வு பெறுகிறார்.

வானிலை என்றால் தமிழர்களுக்கு முதலில் நினைவுக்கு வருபவர் ரமணன் என்றால் மிகையல்ல, தமிழகத்தில் எல்லோரும் அறிந்து வைத்திருக்கும் பிரபலங்களில் ரமணன் கண்டிப்பாக இருப்பார்.

பள்ளி கல்லூரிகளில் அதிகம் கிண்டலுக்கு ஆளனவரும் இவர்தான். ஆனால் சென்னையை புரட்டி போட்ட வெள்ளத்தை முன்கூட்டியே சரியா கணித்து எச்சரிக்கை விடுத்தவரும் ரமணன் என்பது குறிப்பிடத்தக்கது.

பழகுவதற்கு ஆகச்சிறந்த நபர்களில் ஒருவராக, பத்திரிக்கை ஊடகத்துறைக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுக்கும் பண்பு மிக்கவராக ரமணன் என்றுமே திகழ்ந்து வருகிறார்.

நாளை ரமணன் அவர்களின் பணி நிறைவு பேரும் நாள் என்பது சற்று வருத்தமான செய்தியாக இருந்தாலும், ஓய்வுக்கு பிறகு பள்ளி கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு வானிலை பற்றி வகுப்பு எடுக்கப் போவதாக ரமணன் தெரிவித்துள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை மையம் என்ற வட்டத்தில் இருந்து ரமணன் ஓய்வு பெற்றாலும், பொதுவெளியில் இனி வானிலை மையத்தில் ஆற்றிய சிறப்பான பணியை விட கூடுதலான சேவைகளை ரமணன் அவர்களிடம் நாம் நிச்சியம் எதிர்பாக்கலாம்.

சிறப்பான பணியை வானிலை மையத்துக்கு வழங்கி அடுத்தகட்டமாக மேலும் சிறப்பான பணிகள் செய்ய காத்திருக்கும் ரமணன் அவர்களுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top