Mohamed Farook Mohamed Farook Author
Title: வெளிநாட்டு வாழ்க்கையில் பாங்கு சொல்லும் வரை ஒர் உறக்கம்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வெள்ளிக்கிழமை வந்தால் ஜூம்மா பாங்கு சொல்லும் வரை ஒர் உறக்கம். தொழுதபின் நல்லதொரு பரியாணி அதன் பின் உறவுகளுக்கும் மனவிக்கும் தொலைபேசியி...
வெள்ளிக்கிழமை வந்தால் ஜூம்மா பாங்கு சொல்லும் வரை ஒர் உறக்கம். தொழுதபின் நல்லதொரு பரியாணி அதன் பின் உறவுகளுக்கும் மனவிக்கும் தொலைபேசியில் ஒரு உரையாடல். மனைவியிடம் போனில் பேசிவிடலாம் என்று போன் செய்து வீட்டில் உள்ள அனைவரிடமும் ஒவ்வொருவராக பேசி கடைசியாக அவள் முறை வரும் சமயம் உன் அலைபேசியில் போதுமான தொகையில்லை என்று பதிவுசெய்யப்பட்ட வேறு ஒரு பெண்ணின் குரலைக்கேட்டு சந்தோஷப்பட்டுக் கொள்வதை தவிர உனக்கு வேறென்ன சந்தோஷம் இந்த பாலைவெளியில் கிடைத்திருக்கின்றது.

தவறிப்போய் உன் மனைவியிடம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்து அவள் மாமியார் மற்றும் நாத்தனாரின் அடக்குமறையை பற்றி பேசும் பொழுது நீ நொறுங்கிப் போயிருப்பாய். அவளுக்கு ஆறுதல் சொல்லும் முன் உன் அலைபேசியில் மனைவியின் குரலுக்கு பதிலாக மீண்டும் பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் உன்இயலாமையின் மீது ஓங்கி ஒலிக்கும்.

உன் தந்தையின் அகால மரணத்துக்கு செல்ல முடியாமல் இரண்டு பகல் ஒரு இரவு உன் வரவுக்காக காத்திருந்த உன் தந்தையின் ஜனாஸா நீயில்லாமலே அடக்கம் செய்யப்பட்டதே, அவரை நினைத்து உன் தாய் மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது அவளருகிலிருந்து உன் மனைவி செய்ய மறுத்த பணிவிடைகளை உன்னால் செய்ய முடிந்ததா?

பிடிங்கிவிடு என்று இழந்த உன் பல்லும் உன் 40 வயது ஆரோக்கியத்தை 60 ஆக காண்பிக்கின்றதே. உன்னால் அடுத்த வருடம் வரை தாக்குப்பிடிக்க இயலுமா
27 வருடமாக நீ இங்கிருந்து இழந்ததில் உன் குழந்கைகளின் கல்வியும் அடக்கம்.

நீ ஊரில் இருந்த போது 30 நாட்கள் ஒழுங்காக படித்த உன் கடைக்குட்டிப் பையன் நீ விடுமுறை முடிந்து வந்தவுடன் மீண்டும் நகர்வலம் செல்லத் தொடங்கி விட்டான், அவன் 12வது தேறுவது கடினம் என்று வருந்துவதை விட்டு விடு. வளைகுடா நாட்டின் தெருக்களை சுத்தம் செய்ய உன் மகன் அங்கு தயாராகி வருகின்றான். இனி அவன் முறை வருகின்றது. அவன் வந்து உன்னை தாய்நாட்டுக்கு அனுப்பி வைப்பான்.

65 வயதாகிவிட்டவர்களுக்கு இனி அக்காமா அடிக்க முடியாது என்று அரசாங்கம் இட்ட ஆணையை தொடர்ந்து 34 வருடமாக இங்கு உழைத்துக் கொட்டிய தெற்குத் தெரு டெய்லர் மாமா நல்ல உடல் நிலையுடன் தாயகம் கேன்ஸலில் திரும்பியவருக்கு உடல் நிலை மோசமாகி படுக்கையில் கிடக்கின்றார். அவருடைய வங்கியில் ஏதுமில்லை.

அவருடைய மகன்தான் இன்று வைத்திய செலவுகளை பார்கின்றான். ஏதோ அவன் புத்திசாலியாய் இருந்ததினால் இங்கு ஒரு தொழிலை பலருடன் சேர்ந்து கூட்டாக ஆரம்பித்து அதன் வருவாயில் ஊரில் நலமுடன் இருக்கின்றான். அவனைப் பார்த்தாவது நாம் படிப்பினை பெற வேண்டாமா?

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top