காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: சிறுபான்மையினர் வரையறையில் ரோஹித் வெமுலாவின் தற்கொலை வராது! -ஐ.நாவில் இந்தியாவின் வாதம்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ஐ.நாவில் அமைதியான போராட்டங்களில் மனித உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்திய விவாதம் நடந்து வருகிறது. இதில் இந்தியாவிற்கா...
ஐ.நாவில் அமைதியான போராட்டங்களில் மனித உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்திய விவாதம் நடந்து வருகிறது. இதில் இந்தியாவிற்கான ஐ.நாவின் அதிகாரி பேசும் பொழுது “அமைதியான போராட்ட வழிமுறைகள் மக்களின் உரிமை ஆனால் அது சமூகத்தின் அன்றாட வாழ்க்கையை பாதிப்பதாக இருக்க கூடாது” என்று குறிப்பிட்டார்.

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதிலு உறுதியாக உள்ளது மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களின் பேச்சுரிமையையும் கருத்துரிமையையும் மதிக்கிறது, மற்றும் அமைதியான முறையில் ஒன்று கூடி முன்னெடுக்கப்படும் அமைதியான போராட்டஙக்ளுக்கும் உரிமை அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

மேலும் உரிமை என்பது சில வரையறைகளுக்கு உட்பட்டது, நாட்டின் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையில்  போராட்டங்கள் இருக்க கூடாது என்பதை வலியுறுத்தினார்.

சில வாரங்களுக்கு முன்பாக இந்தியாவில் சாதியின் ரீதியாக மக்கள் ஒடுக்கப்படுவதை குறித்து ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு பிறகான சிறப்பு அறிக்கை குறித்து பேசும் பொழுது.

ரோஹித்தின் மரணத்திற்கான காரணம் குறித்தும் ரோஹித்தின் உரிமைக்கான போராட்டத்தை குறித்தும்  பேசாமல் ஐ.நாவின் சிறப்பு அறிக்கை தவறானது அது சிறுபான்மையினர் வரையறையில் ரோஹித் வெமுலாவின் தற்கொலை வராது என்பது போல் பேசினார்.

சாதி எனும் பெயரால் இங்கே ஒடுக்கப்படும் மக்களை அவர்கள் சிறுபான்மையினர் இல்லை என்று கூறி அவர்களின் உரிமையை மறுத்த இந்தியா, பேச்சுரிமை கருத்துரிமை இந்தியாவில் பாதுகாக்கப் படுகிறது என்று ஐநாவில் பேசுவது இரட்டை வேடம் தரிப்பதாக இருக்கிறது. ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லவில்லை என்றால் இந்தியாவை விட்டு வெளியேறச் சொல்லும் குரலும் இந்த ஜனநாயக நாட்டில் ஒலிப்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top