vkrnajur vkrnajur Author
Title: தமிழகத்தில் மீண்டும் கருணாநிதி ஆட்சி மலர வேண்டும்: காதர் மொகிதீன் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
இது குறித்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்  காதர் மொகிதீன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தில், 2016 ஆம் ஆண்டு த...
இது குறித்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்  காதர் மொகிதீன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில், 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைத்  தேர்தலில், திமுக தலைமையில் கருணாநிதி ஆட்சி மலர வேண்டும், தமிழகத்தில் கவ்வியிருக்கும் இருளை நீக்கும் நல்லாட்சியின் ஒளி புலர வேண்டும், தமிழகத்தில் உருவாகும் மக்கள் நல ஆட்சியின் பெருமையை இந்திய மாநிலங்கள் மட்டுமின்றி, உலக அரங்கில் உள்ள நாட்டினரும் உணர வேண்டும்.
இந்த இலட்சியத்தை எட்டிப் பிடிக்கும் குறிக்கோளுடன் தான் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது அரசியல் தோழமையை - உறவை - உடன்பாட்டைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தை இன்றைக்கு ஆளும் அதிமுக அரசு, தன்னால் தான் கெட்டுள்ள அரசாகி விட்டது. ஆளும் அரசை வீழும் அரசாக மாற்றி, தி.மு.க. தலைமையிலான நல்லரசை புனித ஜார்ஜ் கோட்டையில் நிறுவ ஏலும் என்பதால்தான் இந்திய தேசிய காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு வந்துள்ளது.
தமிழக முஸ்லிம் சிறுபான்மை மக்கள், திமுக கூட்டணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணியை அமோக மாக வெற்றி பெறச் செய்வதற்கு உரிய வழியை மட்டுமே சிந்திக் கும் நேரமிது. வேறு வேறு ஆதங்கம், ஆத்திரம், ஆவேசம் எதுவும்  தேவை இல்லை. நமது உழைப்பு அனைத்தும் நமது கூட்டணியின் வெற்றி பற்றிய தாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top