Mohamed Farook Mohamed Farook Author
Title: அப்ரிடி இந்தியாவை புகழ்ந்து பேசியது குறித்து வக்கார் யூனிஸ் கருத்து
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் அப்ரிடி கொல்கத்தாவில் சி...
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் அப்ரிடி கொல்கத்தாவில் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானை விட இந்தியாவில் எங்கள் மீது அதிக அன்பு காட்டப்படுகிறது.

வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம். இங்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை நாங்கள் ஒருபோதும் உணர்ந்தது இல்லை’ என்று தெரிவித்து இருந்தார்.

இந்த பேட்டி அப்ரிடிக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. அப்ரிடியின் கருத்து வெட்கக்கேடானது என்று முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் கருத்து தெரிவிக்கையில், ‘என்னை பொறுத்தமட்டில் அப்ரிடி சொன்னதில் சர்ச்சை எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

அவரது மனதில் பட்டதையும், உணர்ச்சியையும் வெளிப்படுத்தி இருக்கிறார். நாங்கள் இந்த விவகாரத்தை தள்ளிவைத்து விட்டு, தரமான கிரிக்கெட்டை விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே சிறந்த திட்டமாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top