Mohamed Farook Mohamed Farook Author
Title: வெளிநாட்டு ஜனாஸா! இது கதை அல்ல வாழ்க்கை!!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
கணவர்: ஹலோ வீட்டு வேலையெல்லாம் முடிஞ்சுதா மணைவி: ம் முடிஞ்சிடுச்சி 3வருசம் எங்களை பிரிஞ்சு வீட்டை கட்டிட்டுதான் வருவேன்னூ இருந்துட்டிங்...
கணவர்: ஹலோ வீட்டு வேலையெல்லாம் முடிஞ்சுதா
மணைவி: ம் முடிஞ்சிடுச்சி 3வருசம் எங்களை பிரிஞ்சு வீட்டை கட்டிட்டுதான் வருவேன்னூ இருந்துட்டிங்க

கணவர்: என்னம்மா பன்றது வீடு முக்கியமில்லையா இப்பதான் நிம்மதியா இருக்கு

குழந்தை: உம்மா உம்மா போனை குடு நான் அத்தாகிட்ட பேசுரேன்
ஹலோ அத்தா நல்லாறிக்கியா
நல்லா இருக்கம்மா
எப்பத்தா ஊருக்கு வர
சீக்கிரம் வந்துடுவேம்மா
அத்தா நான் பெரிசா வலந்துட்டென் ஏன் போட்டோவ பாத்தியா
ம் பாத்தேம்மா

சரி உம்மட்ட போனை கொடுக்குறேன்

மணைவி: அப்பரம் வேர என்ன சேதிங்க
கணவர்: எல்லாம் நல்ல சேதிதான் வர 18ஆம் தேதி ஊருக்கு வரேன்
மணைவி: நல்லதுங்க புள்ளைங்க ஆசைபடுதுவோ ஏர்போட்டுக்கு அலைச்சிகுட்டு வரவா
கணவர்: ஏன் புள்ளைங்க வராமயா அலைச்சிகிட்டுவாபுள்ள
15ஆம் தேதி ரிங் ரிங்ரிங் டெலிபோன் ஒளி கேட்க்க
மணைவி: ஹலோ யார் பேசுரது
நண்பர்: நான் அக்பர் ஃபிரண்டு பேசுரேன் அக்பர் 18ஆம் தேதி ஊருக்கு வரல 20ஆம் தேதி வந்துடுவான்
அக்பர் மணைவி::
என்ன பிரச்சனை ஏன் எனக்கு போன் பன்னல
நண்பர்: ஒன்னுமில்லமா அரபி முதலாளிகூட திடீர்னு சவுதி போய்ட்டான் அதான்
அக்பர் மணைவி: சரிண்ணா வந்த உடனே ஃபோன் பன்ன சொல்லுங்க
நண்பர்: இல்லம்மா ஊருக்கு வரதால கையில் காசு வேனும்னு போனை வித்துட்டான்
நண்பர்: சரி ஏர்போர்டுக்கு யாரு வரா
அக்பர் மணைவி: நானும் பிள்ளைங்களும் வரோம்ண்ணா
நண்பர்: வேனாம்மா நாங்க மூனு பேரு குரூப்பா வரோம் பொம்பள நீயேன் கஸ்ட்ட படுர உன் அண்ணணை வரசொல்லும்மா
சரிண்ணா

குழந்தை:: ஏன்ம்மா ஒரு மாதிரி இருக்க
உம்மா:: அத்தா நம்மல ஏர்போர்டுக்கு வரவஞனானு சொல்லுடுச்சாம் அவங்க ஃபிரன்டோட சேர்ந்து வராங்களாம்.
குழந்தை: அப்பன்னா ஏத்தி விட நம்ம போவோம் சரியா
20ஆம் தேதி ஹலோ நான் அக்பர் மச்சான் பேசுரேன் ஏர்போர்ட் வெளியிலதான் நிக்கிறேன் லக்கேஜ் வந்துடுச்சா இன்னும் கானும் உங்களை

இதோ வந்துடுவோம் எல்லா பார்மாலிட்டிஸும் முடிச்சாச்சி
மச்சான்ட்ட கொஞ்சம் போனை கொடுங்க
அவர் இமிகிரேசன் செக்கிங்கில் இருக்காப்ல… வந்து பேசிக்கலாம்
 
ஒரு‬ மணி‬ நேரம்‬ கழித்து‬
ஹலோ அக்பர் மச்சானா
ஆமாண்ணா
அப்டியே மூனாவது கேட்டுக்கு வண்டியை எடுத்துகிட்டு வாங்க
சரிண்ணா
ஏன் இங்க வர சொண்னாப்ல இது கார்கோ டெலிவரி கேட்டாச்சே
சில மணி துளிகளில் அக்பரின் நண்பர் கேட்டைவிட்டு ஒரு வண்டியில் பெட்டியை வைத்து தள்ளியபடி அக்கரின் மைதுனர் அருகில் அழுதபடியே வந்து நிற்க்க அதிர்ச்சியில் உறைந்தார் மைத்துனர்….
வண்டி புறப்பட்டது

உம்மா அத்தா வர இன்னும் எத்தனை மனி நேரமாகும்
மாமா போன் பன்னுச்சி வந்துகிட்டு இருக்காங்கலாம்
உம்மா போன் அடிம்மா அத்தாட்ட பேசுரேன்

ரிங் ரிங்ரிங் ஹ லோ அண்ணா மச்சான்ட ஃபோனை குடு புள்ள பேசனுங்குறா
மச்சான் அசந்து தூங்குது அரை மணி நேரத்துல வந்தெடுவேன் வந்து பேசிக்கலாம்
வேன் ஊருக்குள் நுலைந்து தெருவில் வீட்டுக்கு சில தூரத்தில் செல்கிறது
ஐஐஐ உம்மா வேன் வந்துடுசு வாம்மா அந்தா வந்துடுச்சு
வேனை விட்டு விரைவாக இரங்கிய அக்பரின் மச்சான் அவசரமாக வீட்டுக்குள் செல்ல
ஏன்ணா இவ்வளவு லேட்டு

ஒன்னுமில்ல நீ கொஞ்சம் அமைதியா இரு என கண்கழங்க
என்னாச்சு என பதறியபடி வெளியில் வந்து பார்க்கும்போது
அக்பரின் உடல் ஜனாசா பெட்டியில் வைக்கப்பட்டு வேனில் இருந்து இறக்குவதை பார்த்த அக்பர் மனைவி அதே இடத்தில் அதிர்ச்சியில் சரிந்து விழ…

அங்கு குவிந்திருந்தவர்கள் ஏன் என்னாசு எப்படி நடந்தது என வினவ வீடு கட்டனும் வீடு கட்டனும்னு ஒரே சிந்தனை ஒழுங்க சாப்பிடுரதில்ல ஓவர் டைம் கண்முழிப்பு ஓய்வில்லாம மிசின் மாதிரி உழைத்தான் அதிகமா சிந்திச்சதன் விலைவு திடிர்னு மூலைக்குபோற நரம் வெடிச்சிடிச்சுனு டாக்டர் சொன்னாரு..

வீட்டை கட்டிட்டான் அதுல வாழ அவன் இலையே என கதறி அழுதபடி அக்பரின் பிள்ளைகளை வாரி அனைக்க..
அவரை உதறியபடி கட்டிய புது வீட்டின் ஜண்னல் கண்ணாடிகளை கல் எறிந்து உடைத்தபடி எங்க அத்தா உன்னாலதானே மெளத்தாப்போச்சி என வீட்டை பார்து குழந்தைகள் கதறி அழுததை கண்டபோது
அங்கு கூடி இருந்தவர்களின் கண்களும் கலங்கிவிட்டன.

பணத்தைத் தேடி ஒடுகிறோம்!
ஒரு நாள் அதை விட வேகமா திரும்பி வருவோம் !
அப்பொழுது அனுபவிக்க வாழ்க்கை மீதம் நம்மிடம் இருக்காது !

இன்ஷாஅல்லாஹ்.....

என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்று இருக்க கூடாது என்று நான் முயற்சிகிறேன்
நீங்களும் துவா செய்யுங்கள்;

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top