vkrnajur vkrnajur Author
Title: தேர்வின் போது மாணவனின் செல்போனுக்கு விடையை அனுப்பிய ஆசிரியர்கள் கைது !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ஒடிசா மாநிலத்தின் கஞ்ஜாம் நகரில் உள்ள பாரதி வித்யா பீட் பள்ளியில் மெட்ரிகுலேசன் தேர்வுகள் சமீபத்தில் நடந்தது. கணக்குப் பாடத்திற்கான தே...
ஒடிசா மாநிலத்தின் கஞ்ஜாம் நகரில் உள்ள பாரதி வித்யா பீட் பள்ளியில் மெட்ரிகுலேசன் தேர்வுகள் சமீபத்தில் நடந்தது. கணக்குப் பாடத்திற்கான தேர்வு நடைபெற்ற போது, ஒரு மாணவர் 20 நிமிடம் தாமதமாக தேர்வு எழுதும் அறைக்கு வந்துள்ளார்.  

தேர்வு மைய கண்காணிப்பாளர் அந்த மாணவரை சோதனை செய்துள்ளார்.  அப்போது அவரிடம் ஒரு செல்போன் இருந்துள்ளது. இருந்தும் அவர் அந்த மாணவனை தேர்வு எழுத அனுமதித்துள்ளார். அந்த மாணவன் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் போது, அவரின் செல்போனுக்கு ஏராளமான எஸ்.எம்.எஸ் மற்றும் மிஸ்டு கால்கள் வந்துள்ளன.  
இதனால் சந்தேகம் அடைந்த கண்காணிப்பாளர், அந்த மாணவனின் செல்போனை சோதனை செய்துள்ளார். அப்போது, அந்த தேர்வுக்கான பதில்களை யாரோ குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) மூலம் அனுப்பியது தெரியவந்தது.  
அதிர்ச்சியை அடைந்த அவர், இதுபற்றி போலீசாருக்கு புகார் கொடுத்தார். மாணவனுக்கு யார் குறுஞ்செய்தி அனுப்பியது என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த பகுதியை சேர்ந்த மூன்று ஆசிரியர்கள்தான் மாணவனுக்கு உதவி செய்தது தெரியவந்தது.   
இதையடுத்து அந்த மூன்று ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top