vkrnajur vkrnajur Author
Title: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள சிறை கைதிகள் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தமிழகம் முழுவதும் 100 சிறைவாசிகள் அவர்களுக்காக அமைக்கப்பட்ட புழல்-1 மையத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.   தமிழகத்தில் பிள...
தமிழகம் முழுவதும் 100 சிறைவாசிகள் அவர்களுக்காக அமைக்கப்பட்ட புழல்-1 மையத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.  

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் 4ஆம் தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் 10ஆம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளை சிறைவாசிகளும் எழுதி வருகின்றனர்.

சிறைவாசிகளை பொறுத்தவரை படிக்க விரும்பும் அனைவருக்கும் அதற்கான வசதிகளை சிறைத்துறை செய்து தருகிறது. பட்டப்படிப்பு படிக்கும் சிறைவாசிகளுக்கு சிறைகளுக்கே சென்று பேராசிரியர்கள் வகுப்பு எடுக்கின்றனர். அதேபோல், மற்றவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் 100 சிறைவாசிகள் வருகிற 4ஆம் தேதி தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக புழல்-1 சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறைவாசிகள் 3 பேர் சென்னை புழல் சிறையில் தேர்வு எழுதுகின்றனர்.

இதற்காக இவர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். தேர்வு முடியும் வரை அவர்கள் அங்கேயே தங்கி தேர்வை எதிர்கொள்கின்றனர். தேர்வு முடிவடைந்ததும் அவர்கள் மீண்டும் வேலூர் சிறைக்கு திரும்புவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top