vkrnajur vkrnajur Author
Title: ஆர்எஸ்எஸ் - ஐஎஸ் ஒப்பீடு: குலாம் நபி பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
அண்மையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஆர்எஸ்எஸ் அமைப்பை ஐஎஸ் பயங்கரவாத அமைப்ப...
அண்மையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஆர்எஸ்எஸ் அமைப்பை ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட்டுப் பேசியதாக பாஜகவினர் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஜமாத் உலேமா இ ஹிந்த் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சியில் பேசிய குலாம் நபி ஆசாத், "நாம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை எதிர்ப்பது போல ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ எதிர்க்கிறோம். முஸ்லிம்கள் தவறான பாதையில் செல்வது, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தவறிழைப்பதும் சமமே. சக மனிதர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துபவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை எதிர்க்க வேண்டும்.
இதற்கு மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இங்கு நடக்கும் யுத்தம் மதவாதத்துக்கும், மதச்சார்பின்மைக்கும் இடையேயானது. இந்தியா அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதே" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், அவரது கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவையில் இவ்விவகாரம் இன்று எதிரொலித்தது. குலாம் நபி ஆசாத் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும், மன்னிப்பு கோர வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தினர்.
மாநிலங்களவை பாஜக தலைவரும், மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி, "ஐ.எஸ். அமைப்பை குலாம் நபி தெரிந்தே மதிப்பிட்டுள்ளாரா இல்லை தவறுதலாக நடந்ததா என்பதை விவரிக்க வேண்டும்" என்றார்.
அதற்கு பதிலளித்த குலாம் நபி ஆசாத், "சம்பந்தப்பட்ட சிடியை நான் அரசிடம் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறேன். நான் ஏதாவது தவறாக பேசியிருந்தால் உரிமை மீறல் மசோதாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்" என்றார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top