Mohammed Farook Mohammed Farook Author
Title: இன்று கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இடம் பெற்று உள்ளது. அந்த கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா...
சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இடம் பெற்று உள்ளது.

அந்த கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று காலை 11 மணியளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.
கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நேரம் நடந்தது.

அப்போது தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது, பொருளாளர் ரகமதுல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மூத்த தலைவர் ஹைதர் அலி, மாநில தலைவர் ரிபாயி ஆகியோர் உடன் இருந்தனர்.

கருணாநிதியை சந்தித்து விட்டு வெளியே வந்த ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:–

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. தமிழக அளவிலும், அகில இந்திய அளவிலும் மதசார்பற்ற கட்சிகள் ஒன்று இணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

அந்த அடிப்படையில்தான் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இடம் பெற்றுள்ளோம்.
தமிழக மக்கள் இடையே ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் வரும் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.

தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. குழுவினருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவோம். தமிழக மக்கள் தொடர்பான 17 அம்ச கோரிக்கை மனுவை கருணாநிதியிடம் அளித்து இருக்கிறோம்.

கேள்வி: தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும் என்று நீங்கள் அழைப்பு விடுத்தீர்கள்? தி.மு.க. தலைவர் கருணாநிதியும் தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் அவர் தி.மு.க.வை விமர்ச்சித்து வருகிறாரே?

பதில்: விஜயகாந்த்துக்கு அழைப்பு விடுப்பது எங்களது கடமை. ஏற்றுக் கொள்வதும், மறுப்பதும் அவரது விருப்பம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top