Mohammed Farook Mohammed Farook Author
Title: பாகிஸ்தானில் தீபாவளி, ஹோலி பண்டிகை நாட்களில் பொது விடுமுறை அளிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
பாகிஸ்தானில் தீபாவளி, ஹோலி, ஈஸ்டர் பண்டிகை நாட்களில் பொது விடுமுறை அளிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம். பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்...
பாகிஸ்தானில் தீபாவளி, ஹோலி, ஈஸ்டர் பண்டிகை நாட்களில் பொது விடுமுறை அளிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக அங்குள்ள சிறுபான்மையின அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் ஹோலி, தீபாவளி, ஈஸ்டர் ஆகிய பண்டிகைகளுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்து உறுப்பினரான ரமேஷ் குமார் வன்க்வானி தீர்மானம் கொண்டு வந்தார்.

இதையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய மத விவகாரங்களுக்கான இணை மந்திரி பீர் அமினுல் ஹஸ்னத்,  சிறுபான்மையினருக்கு அவர்களின் பண்டிகைகளின்போது விடுமுறை அளிப்பதற்கு அரசு நிறுவனங்களின் தலைமைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது என்று தெரிவித்தார்.

சிறுபான்மை மக்களின் மத பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அறிவிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என தகவல் தொடர்புத்துறை மந்திரி பர்வாய்ஸ் ரஷித் பேசினார்.

தீர்மானத்தை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டதையடுத்து தீபாவளி, ஹோலி மற்றும் ஈஸ்டர் பண்டிகை நாட்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட உள்ளன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top